Sunday, September 25, 2011

உள்ளாட்சித் திருவிழா!!!

     
                                                     உள்ளாட்சித் திருவிழா


                 ஆரம்பிங்கப்பா ஆரம்பிங்கப்பான்னு 4 மாச இடைவெளில
அடுத்த கோலாகல திருவிழாவ ஆரம்பிச்சாச்சு நம்ம ஊர்ல அதான் உள்ளாட்சித்தேர்தல்.தமிழ் நாடு பூரா பாராளுமன்றத் தேர்தல்ல 39 பேரையும் சட்டமன்றத் தேர்தல்ல234 பேரையும் தேர்ந்தெடுக்கிற நாம இந்த தேர்தல்ல மேயர்ல் இருந்து வார்டு மெம்பர்வரைக்குமா சுமார் 1,25,000 பேர தேர்ந்தெடுக்கனும் அல்லது 1,25,000 பேருக்கு நாம 
எல்லாருமா சேர்ந்து வாழ்க்கை குடுக்கிறோம்னும் சொல்லலாம்.


                       வழக்கம்போல தேதி அற்விக்கிறதுக்கு முன்னாலயே ஆளும்கட்சி படபடன்னுவேட்பாளர் லிஸ்ட்ட வெளியிட்டு கூட்டனி கட்சிகளுக்கெல்லாம் பே(பீ)தி குடுத்தாச்சு இலவசதிட்டங்களையெல்லாம் அறிவிச்சு திருவள்ளூர்ல பந்தல் போட்டு ஆடு மாடுலஇருந்து லேப்டாப் வரைக்கும் குடுத்துட்டு “இலவச திட்டங்கள் மக்களைபிச்சைக்காரர்கள் ஆக்கும் திட்டங்கள்”ன்னு சொன்னவங்களே இலவசங்களை இலவசம்னு சொல்லி கொச்சைப்படுத்தாதீங்கன்னு சொல்லிட்டாங்க இத அவங்க 
யாருக்கு சொன்னாங்கன்னு யாருக்குமே தெரியல. ஒருவேளை அவங்களே அவங்களுக்கு சொல்லிகிட்டாங்களோ என்னவோ? இலவசங்களை எல்லாம் அறிவிச்சாச்சாம்மா ? வேற ஏதாவது பாக்கி இருக்கா தேர்தல் தேதிய அறிவிச்சிடலாமாம்மான்னு கேட்டு தமிழக 
தேர்தல் ஆணையம் தேதியும் குறிச்சிட்டாங்க . அதுலயும் உசாரா அக்டோபர் 20ம் தேதி சொத்துக்குவிப்பு (இந்த கேச ஒன்னும் பண்ண முடியலையே) வழக்குல பெங்களூர் கோர்ட்ல ஆஜராகவேண்டியதிருக்கிறத யோசிச்சு 20 ம்தேதிக்கு முன்னாடியே ஓட்டுப் பதிவுக்கு நாள் குறிச்சு ஜரூரா களத்துலயும் எற்ங்கிடுச்சு ஆளுங்கட்சி.


                                   நாலு மாசத்துக்கு முன்னாடி வரை நம்மள ஆண்ட கட்சியான திமுக தலைவருக்கு (தமிழினத் தலைவர்...?) மிச்சமிருக்கிற ஒரே லட்சியம் குறிக்கோள் அஜண்டா எல்லாமே தன் மகள் கனிமொழிக்கு ஜாமீன் வாங்கிடனும்ங்கிறது தான் ஆனா காங்கிரஸ்காரங்களை கேட்டா அந்த ஜாமீன் கடல்ல்ல்லயே இல்லைங்கிறாங்க. ஆனாலும் சீக்கிரமே அந்த ஜா “மீன்” கிடைச்சிரும்னு நம்பிக்கைல அந்த வீட்டுக்கு வெள்ளையெல்லாம் அடிக்கச் சொல்லியிருக்காராம். ஆனாலும் இந்த உள்ளாட்சி பதவிகள் மக்களுக்கு ரொம்ப நெருக்கமானது.  கட்சிக்காரங்க நிறைய பேருக்கு வாய்ப்பு குடுக்க கூடியது இப்ப சும்மாயிருந்தா இதோட கட்சி கோவிந்தாதான்னு
புரிஞ்சுகிட்டு, எங்களுக்கு யாரோட தயவும் தேவையில்ல சிங்கம் சிங்கிளாத்தான் களமிறங்கும்னு காங்கிரசையும் திருமாவையும் கழட்டி விட்டுட்டு களத்துல எறங்கிட்டாங்க. ஆனா அவங்க அறிவிச்சுருக்கிற வேட்பாளர் பட்டியலை பார்த்தாலே அவங்க இந்த தேர்தலுக்கு எவ்ளோ முக்கியத்துவம் குடுக்கிறாங்கன்னு புரியுது சென்னை மேயர் வேட்பாளர் மா.சு.வைத் தவிர வேற எந்த மூஞ்சியயும் யாருக்கும் தெரியாது. ஸ்டாலின் மட்டும் ஜெயில் ஜெயிலா கட்சிக்காரங்களை போய் 
பாத்துட்டு “தேர்தல் வேலை பாக்க ஒவ்வொரு தொண்டனும் தேவை மச்சான்”ன்னு சொல்றமாதிரி “திமுக வின் ஒவ்வொரு தொண்டனும் வேட்பாளர்”தான்னு பீதிய கெளப்புறாரு. ஆனா இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே நம்மள ரணகளமாகிடுவாங்கன்னு உசாராயிட்டாங்க தொண்டர்கள். இதுல கொடுமை   என்னான்னா நாட்டாம தீர்ப்ப மாத்துன்னு சொல்ற மாதிரி “நாட்டாம நாட்டாமையவே ! மாத்து”ன்னு அந்த நாட்டாம கிட்டயே போய் பெட்டிசன் குடுக்கிறாங்க.


                       இந்த் அழகுல திருச்சி இடைத்தேர்தல் வேற ! புதுசா யாரையாவது வேட்பாளரா போட்டு அவரு மேலயும் ஏதாவது நில அபகரிப்பு வழக்கு போடவச்சு உள்ள அனுப்புறத விட ஏற்கனவே உள்ள இருக்கிற நேருவையே வேட்பாளரா அறிவிச்சுட்டாங்க ! என்ன ஒரு ராஜதந்திரம்...? அதும் இடைத்தேர்தல ஆளுங்கட்சி எப்படி நடத்தும் ?னு 
இவங்களுக்குத் தெரியாதா.தேர்தல் அரசியலுக்கு வேணா இவங்க முன்னோடியா இருக்கலாம் . ஆனா இடைத்தேர்தல் அரசியலுக்கு அவங்க (அதிமுக) தான இவங்களுக்கு முன்னோடி. காஞ்சிபுரத்துலயும் மருங்காபுரிலயும் அவங்க செஞ்சதத்தான் இவங்க ஸடைல
மாத்தி பட்டி பாத்து கொஞ்சம் டிங்கரிங் பண்ணி
 “திருமங்கலம் பார்முலா”ன்னு பேர் வச்சாங்க. ஆமா இதுல இடைத் தேர்தல் எக்ஸ்பர்ட் “அஞ்சா நெஞ்சர்?”எங்க போனாரு என்ன ஆனாரு எப்படியிருக்காருன்னு யாருக்குமே தெரியல..!? யாருமே கண்டுக்கல !


                           அப்புறமா நம்ம எதிர்கட்சி தேமுதிக.. நான் கட்சி ஆபிசுக்கு வரும்போது எல்லாரும் “கேப்டன் கேப்டன்னு” கூப்டற மாதிரி சட்டசபைக்கு வரும் போதும் நம்ம எம் எல் ஏக்கள் எல்லாரும் அப்படி கூப்டனும்னு ஆசைப்பட்டாரு. ஆனா அம்மா இருக்கிற சட்டசபைல இதெல்லாம் நடக்குமா? ஆனாலும் இந்த தேர்தல மனசுல வச்சுகிட்டு
எப்படியும் இந்த கூட்டனிலயே ஒட்டிகிட்டு கட்சிக்காரங்க இன்னும் கொஞ்சம் பேருக்கு வாழ்க்கை குடுத்துடனும்னு அடக்கி வாசிச்சுதான் பாத்தாரு. ஆட்சிய பத்தி ஆறு மாசத்துக்கு பேஸ் மாட்டேன்ன்னு தல  அஜித் மாதிரிஅறிக்கை உட்டாரு.சமச்சீர் கல்விலயிருந்து
பரமக்குடி துப்பாக்கி சூடு வரைக்கும் பம்முனாரு. ஆனாலும் புலி..? எதுக்கு புல்ல ( Full இல்லப்பா!) மட்டும் திங்குதுன்னு அம்மாவுக்கு தெரியாதா? பஸ்ல வித்தவுட்ல போற ஆள எறக்கி விடுற மாதிரி கழுத்த புடிச்சு வெளில தள்ளி கதவ சாத்தி ஜன்னலயும் சாத்திட்டாங்க. ஆக மறுபடியும் கேப்டன் பேக் டு த பெவிலியன். மாமாவும் மச்சனுமா சேந்து “தம்பி நீங்க எம்ஜியார் மாதிரி ச்சும்மா தக தகன்னு மின்னுறீங்க”ன்னு ஏத்தி விட்ட பண்ருட்டியாரோட சேந்து பலியாடுகளை தேடுறாங்க
மறுபடியும் கொஞ்சபேர தேர்தல்ல எறக்கி உட்டு கடங்காரங்களாக்கி தெருவுல எறக்கி விட ஆலோசனை பண்றாங்களாம்..பாவம் யாரு பெத்த புள்ளைங்களோ ?


                        அங்கிட்டு நம்ம வைகோ நெலம ரொம்ப பரிதாபங்க. ஒவ்வொரு தேர்தல்லயும் நம்மள கூடவேத்தான் வச்சு பேசுறாங்க எப்படி திட்டம் போடுறாங்க என்ன திட்டம் போடுறாங்கன்னே தெரியல கரைக்ட்டா நம்மள கவுத்துடுறாங்கய்யா .இந்த வாட்டி யாரும் நம்மள கவுத்துடக்கூடாது நாமளே நம்மள கவுத்துடனும்னு கண்ணீரோட 
களத்துல எறங்கிட்டாங்க.  “கூடவே இருக்கியே சம்பத்து நீயாவது தலைவருக்கு எடுத்து சொல்லக்கூடாதா” ன்னு பாவம் அடிப்பொடிகள் எல்லாம் நாஞ்சில் சம்பத்கிட்ட மூக்கு சிந்துறாங்களாம்.இந்த இம்சை தாங்க முடியாமத்தான் அவரு மைக்க தூக்கிட்டு ஊர் ஊரா கெளம்பிடுறாராம். ஆனாலும் நெருக்கமான ஆளுங்க கிட்ட நம்ம வாழ்க்கை இப்படியே கண்ணீரும் கழுத்தறுப்புமா முடிஞ்சிறும் போலருக்கேய்யான்னு கண்ல தண்ணி விடுறாராம் நாஞ்சில் சம்பத்து.


                     சென்னைக்கருகில் திருமழிசையில் துணை நகரம் அமைக்கபடும்னு சட்டசபைல அறிவிச்சதுமே இதை நாங்கள் மனப்பூர்வமா வரவேற்கிறோம்னு வாண்ட்டடா போய் வண்டில ஏர்றாரு நம்ம் அய்யா. இதே போன ஆட்சில அறிவிச்ச துணை நகரம் திட்டத்துல இருந்து அறிவிச்ச எந்த திட்டத்துக்கும் இவரு போட்ட கூச்சல் ஆர்ப்பாட்டம் அய்யோ அய்யோ.!  “ஆனாலும் ஆடு ஏன் பிரியானி சட்டிக்குள்ளார எறங்குதுன்னு” அந்தம்மாவுக்கு தெரியாதா? இவர் திருவாய மலர்ந்த மறு நாளே கள்ளச்சாராயம் காய்ச்சி விக்கிறவனெல்லாம் மது விலக்க பத்தி பேசுறாங்கன்னு சட்ட சபைலயே போட்டு தாக்கிருச்சு அந்தம்மா. எந்த பால போட்டாலும் இந்தம்மா இப்படி அடிக்கிறாங்களேன்னு அப்பாவும் மகனுமா திகைச்சு நிக்கிறாங்களாம். பேசாம திண்டிவனம் பக்கத்துல நம்ம பழைய கிளினிக்க தொறந்து நடத்தலாமான்னு யோசிக்கிறதா கேள்வி. 

                                வித்தவுட்டுன்னு சொல்லி எறக்கி உட்டாலும் எறங்க மாட்டோம்னு அடம்புடிச்சி STS மாதிரி புட் போர்டு அடிச்சாவது உங்க கூடத்தான் வருவோம்னு அடம்புடிக்கிற கம்யூனிஸ்ட்’களோட பேச போனா போகுதுன்னு ஓ.பி.எஸை யும் ,செங்கோட்டையனையும் போயசுக்கு வரச்சொல்லி பேசுனாங்க . இவங்க மேயர்னு  ஆரம்பிக்கும்போதே செங்கோட்டையன் ஆமாமா மேய்க்கிறதுக்குதான் அம்மா இலவச ஆடு மாடுகள குடுக்காங்களேன்னு கலாய்க்கிறாராம்.ஓ.பி.எஸ் வேற இந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சின்னெல்லாம் பேசிட்ருக்காதீங்க ,மாவட்டத்துக்கு 
ஒரு கிராமத்துல ஆளுக்கொரு வார்டு மெம்பர் சீட்டு அம்மாட்ட சொல்லி வாங்கி தர்றோம் ,கூட்டனி பேச்சுவார்த்தை வெற்றிகரமா முடிந்ததுன்னு ஜெயா டிவி மைக் முன்னாடி சொல்லிட்டு பெட்ரோல் அலவன்ச வாங்கிட்டு கெளம்புங்கன்னு சொல்றாராம். சோகத்தோட வெளிய வந்த தா.பாண்டியனும் ,ஜி.ராமகிருஷ்ணனும் நக்கீரன் நிருபர்ட்ட மட்டும் தனியா போய் சட்டசபை தேர்தல் பேச்சு வார்த்தைக்கு வரும் போதாவது முந்திரி பக்கோடா,மில்க் ஸ்வீட்,டிகிரி காபில்லாம் குடுத்தாங்க இப்ப வெறும் சுக்கு காபியோட அனுப்பிட்டாங்கன்னு பொலம்புனாங்களாம். அடடா கம்யூனிஸ்ட்கள் நெலம இப்படி ஆய்டுச்சேன்னு காலைல நியூஸ பார்த்தா தா.பாண்டியன் டெரர் பேஸ காமிக்காரு.களத்துல நாங்களும் எறங்கிட்டோம் போட்டின்னு வந்துட்டா நாங்க யாருக்கும் தயவு தாட்சன்யம் பாக்க மாட்டோம்னு டெரரா பேசுறாரு. அவர் கூவரத 
பாத்தா அடடா “எத்தன தல உருளப்போகுதோன்னு” நமக்கே டெரரா இருக்கு.


                           திருமா ஒரு பக்கம் திமுக எங்கள இப்படி அத்து உட்டுருக்க கூடாதுன்னு ரூம் போட்டு அழுதாறாம்.இருந்தாலும் மனச தேத்திகிட்டு வாங்க மூணாவது அணி அமைப்போம்னு “வருத்தப் படாத வாலிபர் சங்கத்துக்கு” ஆளெடுக்க அலையுறாரு. சட்டசபை தேர்தல் நடக்கும் போது கொடியங்குளம் எங்கருக்குன்னா கேட்டதுக்கு அது எங்கியோ மெக்ஸிகோலயோ,மொனாக்கோலயோ இருக்குன்னு சொன்ன நம்ம 
டாக்டர் கிருஷ்ணசாமி,ஜெயலலிதாவின் அணுகு முறையில் எந்த மாற்றமும்மில்லன்னு புதுசா கண்டுபுடிச்சி சொல்றார் அண்ணே நீங்க இன்னும் வளரணும்னே
.                              2011 தேர்தல்ல ஆட்சிய புடிக்கிற வாய்ப்ப அதிமுகவுக்கு 
விட்டுகுடுத்துட்டோம் ! உள்ளாட்சித் தேர்தல்ல நாம யார்கூட கூட்டணின்னு ? கேட்டு தொண்டர்கள் அலை அலையா ?வருவாங்களேன்னு பயந்து போய் “முனி பார்ட் 2 ”ல வர்ற அரவாணி வேசத்துலயே அலையுறார் நம்ம சித்தப்பா சரத்குமார்.


                       எப்படியும் எலக்சன் முடியுறதுக்குள்ள ஆட்களை அறிவிச்சிடனுமய்யான்னு காங்கிரஸ் காரங்க ரொம்ப மும்முரமா இருக்காஙக.ஆளே இல்லாத ரோட்டுல வெலகு வெலகுன்னு ஆரவாரமா ஆர்ப்பரிச்சு வர்றாங்க பிஜேபி.இவ்ளோ ஆர்பாட்டம் நடக்கு இந்த
 மனித நேய மக்கள் கட்சி, நா.ம.க. கார்த்திக் இவங்களுகெல்லாம் தமிழ் நாட்ல உள்ளாட்சித்தேர்தல்னு ஒன்னு  நடக்கப்போகுதுன்னு யாரும் சொல்லவே இல்லியாம் அவங்களுக்கும் நெசமாவே தெரியாதாம்.


                   மொத்தத்துல ஏழு முனைப் போட்டி, எட்டுமுனைப் போட்டின்னு களம் பரபரப்பா இருந்தாலும்,களத்த கலகலப்பா வக்க ஒரு வடிவேலு இல்லியேன்னு யாரும் கவலைப் பட வேண்டாம் ....ஏன்னா இந்த தேர்தல்ல எல்லாருமே கைப்புள்ளைங்கதான்.